தமிழக அரசின் கீழ் இயங்கும் மன்னார் வளைகுடா காப்பக அறக்கட்டளை மூலம் பல சமுதாயப் பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. சமீபத்தில் இவ்வறக்கட்டளையின் இயக்குனரின் அறிவுறுத்தலின் பல கிராமங்களில் சமுதாய பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இதன் முதற்கட்டமாக மாயாகுளம் கிராம கடல் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்குழுவின் உறுப்பினர்களைக் கொண்டு மாயாகுளத்தில் உள்ள நாடார் மஹாசன சங்கம் சேர்மத்தாய் வாசன் நடுநிலைப்பள்ளியின் வளாகம் சுத்தம் செய்யப்பட்டது. பின்னர் மாயாகுளம் பஞ்சாயத்திலிருந்து பெறப்பட்ட 20 மரக்கன்றுகள் பள்ளி வளாகத்தில் பள்ளி தலைமை ஆசிரியை சுகிபாலின் முன்னிலையில் திட்டக் கிராம உறுப்பினர்கள் மற்றும் திட்ட களப்பணியாளர்களால் நடப்பட்டன.
பின்பு மாயகுளம் நேருஜி மழலையர் தொடக்கப்பள்ளியில் 10 மரக்கன்றுகள் நடப்பட்டன. அதைத்தொடர்ந்து திட்டக்கிராம உறுப்பினர்களுக்கு பிளாஸ்டிக் பைகளால் ஏற்படும் தீமைகள் குறித்தும், கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் பவளப்பாறைகளின் முக்கியத்துவம் குறித்தும் மண்டல அலுவலர் பா.ஜெபஸ், துணை மண்டல அலுவலர் கே.அருண்பிரகாஷ் மற்றும் கீழக்கரை மண்டல திட்டக்களப்பணியாளர்களால் எடுத்துரைக்கப்பட்டது. இப்பணிகள் அனைத்தையும் திட்ட களப்பணியாளர் மு.பூபதிமுனியசாமி ஏற்பாடு செய்திருந்தார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print











