சவூதி அரேபியா, கத்தார், ஓமான், துபாய் மற்றும் ஐக்கிய அமீரகத்தின் பல பகுதிகளில் கடும் பனிப்பொழிவில் இன்றைய தினம் உதயமாயிருக்கிறது. கடும் பனிபொழிவின் காரணமாக 1000 மீட்டர் வரை முன் செல்ல கூடிய வாகனங்கள் தெரியாத அளவுக்கு இருப்பதால் வாகனங்கள் மித வேகத்தில் எச்சரிக்கையாக செல்ல வேண்டிய சூழல் எற்ப்பட்டுள்ளது. அபுதாபி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் காலை நேரத்திலும் மூடுபனியாக இருந்து வருகிறது. இதனால் அபுதாபியில் இருந்து அதிகாலை புறப்பட வேண்டிய பல்வேறு விமானங்கள் சுமார் 2 நேரம் தாமதமாகவும், சில விமானங்கள் ரத்தும் செய்யப்பட்டுள்ளன.


அடுத்த இரண்டு நாட்களுக்கு அரபி கடல் பகுதிகளில் கடும் பனிப்பொழிவு தொடர்ந்து நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடலோரம் மற்றும் நகர் பகுதிகளில் 14 -27 டிக்ரி செல்சியஸும், மலைப்பிரதேசங்களில் 8 – 20 டிக்ரி செல்சியஸ் ஆக குறையும் என்று கணிக்கப்படுகிறது.
வளைகுடா தேசிய சீதோஷனம் மற்றும் அறிவியல் ஆய்வு மையத்தை சார்ந்த வானிலை ஆய்வாலர்கள் கூறுகையில், இந்த வார இறுதிகளில் மேக மூட்டமாகவும், கடலோர பகுதிகளில் மழை பொழிய வாய்ப்பு உள்ளதாகவும், திறந்த வெளிபுறங்களில் மிதமான காற்றழுத்தத்துடன் கூடிய புழுதி காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையினால் வளைகுடா வாழ் சகோதரர்கள் வெளியே செல்லும் போது தலை கவசம் போன்ற போதிய ஏற்பாடுகளுடன் செல்வது நல்லது.
தகவல் : துபாயிலிருந்து கீழை நியூஸுக்காக, ஊடகவிலாளர். அப்துல் ரஹ்மான்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









