தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 1, 2, 2a, 4 உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு சென்னையில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்..

 தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 1, 2, 2a, 4 உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு சென்னையில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.

2025 நவம்பர் 2ஆம் தேதி பயிற்சி கட்டணம் ஏதும் இல்லாமல் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்புப் பயிற்சி மையத்தில் வகுப்புகள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாரத்தின் இறுதி நாட்களில் நடைபெறும் இப்பயிற்சி வகுப்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களும், பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏனைய அனைத்துப் பிரிவு மாணவர்களும் கலந்து கொண்டு பயிற்சி பெறலாம்.

இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள அனைத்துப் பிரிவு மாணவர்களும் முன்பதிவு செய்வதுடன் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம், மற்றும் குடியிருப்பு முகவரிக்கான ஆதார நகலுடன் பயிற்சி வகுப்பிற்கு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை-1 பாரிமுனை 6/9, அக்ரஹாரம் சந்து(கச்சாலீஸ்வரர் ஆலயம்) அருகில் உள்ள அரண்மனைக்காரன் தெருவில் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்புப் பயிற்சி மையம் அமைந்துள்ளது. 2025 நவம்பர் 2ஆம் தேதி பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. ஒவ்வொரு வாரமும் சனி, மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9.30 மணிமுதல் மாலை 4.45 மணி வரையில் வகுப்பு நடைபெறும். தேர்வெழுத தகுதியுடைய மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.

மேலும் கூடுதல் விவரங்களை பெற கீழ்க்கண்ட எண்களை தொடர்பு கொள்ளவும். 97906 10961, 97912 85693, 73387 03324, 90426 92613, 90427 27276, 94446 41712 ஆண்டு முழுவதும் கட்டணம் இல்லாமல் பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதால் மாணவர்கள் நேரடியாகவும் அணுகி விவரங்களை பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!