இராமநாதபுரம் மாவட்டம் 9 வட்டங்களில் உள்ள 400 வருவாய் கிராமங்களுக்கு 1428-ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாயக் கணக்குகளின் தணிக்கை நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் தகவல் தெரிவித்தார்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒன்பது வட்டங்களை உள்ளடக்கிய 400 வருவாய் கிராமங்களுக்கு 1428-ஆம் ஆண்டு வருவாய்த் தீர்வாயக் கணக்குகள் 19.06.2019 முதல் 28.06.2019 வரை வட்டாட்சியர் அலுவலகத்தில் தினமும் காலை 10 மணிக்கு ஜமாபந்தி தீர்வாய தணிக்கை நடைபெறவுள்ளது.
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 19.6.19, 20.6.19, 21.6.19, 25.6.19, 26.6.19, 27.6.19 ஆகிய 6 நாட்களும், மாவட்ட வருவாய் அலுவலர் ராமநாதபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 19.6.19, 20.6.19, 21.6.19, 25.6.19 ஆகிய 4 நாட்களும் ஜமாபந்தி தீர்வாய தணிக்கை நடைபெறவுள்ளது.
இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் திருவாடானை வட்டாட்சியர் அலுவலகத்தில் 19.6.19, 20.6.19, 21.6.19, 25.6.19 ஆகிய 4 நாட்களும், பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் கடலாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் 19.6.19, 20.6.19, 21.6.19, 25.6.19,26.6.19, 27.6.19 ஆகிய 6 நாட்களும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் கமுதி வட்டாட்சியர் அலுவலகத்தில் 19.6.19, 20.6.19, 21.6.19, 25.6.19, 26.6.19 ஆகிய 5 நாட்களும் ஜமாபந்தி தீர்வாய தணிக்கை நடைபெறவுள்ளது.
மேலும் மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் பரமக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் 19.6.19, 20.6.19, 21.6.19, 25.6.19, 26.6.19, 27.6.19, 28.6.19 ஆகிய 7 நாட்களும், சிறப்பு திட்ட அமலாக்கம் (சிறப்பு தனித்துணை ஆட்சியர்) கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் 19.6.19, 20.6.19, 21.6.19 ஆகிய 3 நாட்களும்,மாவட்ட வழங்கல் அலுவலர் ராமேஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 19.6.19, ஆயம் (உதவி ஆணையர்) ராஜசிங்கமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 19.6.19, 20.6.19, 21.6.19 ஆகிய 3 நாட்களும் தணிக்கை நடைபெற உள்ளது.
மேற்கண்ட தேதிகளில் இராமநாதபுரம் மாவட்டத்தின் ஒன்பது வட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள், வருவாய் தீர்வாயக் கணக்குகளில் தணிக்கை நடைபெறும் நாட்களில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









