
இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் வட்டம் – காரேந்தல் (நியாயவிலைக்கடை) / இராமேஸ்வரம் வட்டம் பாம்பன் – (அரசு உயர்நிலைப் பள்ளி) / திருவாடானை வட்டம் – கருங்காலகுடி (நியாய விலைக்கடை) / பரமக்குடி வட்டம் கங்கைகொண்டான் (நியாயவிலைக்கடை ) முதுகுளத்தூர் வட்டம் அலங்கானூர் (நியாயவிலைக்கடை கட்டிடம்) / கடலாடி வட்டம் ஓரிவயல் (நியாயவிலைக்கடை கட்டிடம்)/ கமுதி வட்டம் கேரிசல்குளம் (நியாயவிலைக்கடை), கீழக்கரை திருப்புல்லாணி வட்டம்- திருப்புல்லாணி (நியாயவிலைக்கடை) / ஆர்.எஸ்.மங்கலம் வட்டம் ஆய்ங்குடி (நியாயவிலைக் கடை) ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கு மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பம் செய்தல், குடும்ப அட்டைகளில் பிழைத்திருத்தம், புகைப்படம் பதிவேற்றம், பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு/ மாற்றம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை / நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும் நியாயவிலைக்கடைகளில் பொருள் பெற வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் மற்றும் நோய்வாய்ப்பட்ட பயனாளிகளுக்கு அங்கீகாரச்சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்துதீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 09 வட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் எதிர் வரும் 13.01.2024 (சனிக்கிழமை) காலை 10.00 மணியளவில் நடைபெறவுள்ள குறைதீர் முகாமில் மனுக்களை அளித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் பா.விஷ்ணு சந்திரன் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









