கீழக்கரை அன்பு நகரில் வசித்து வரும் தம்பதியினர் நவராத்திரி கொலுவிற்காக பிளாஸ்டிக் விழிப்புணர்வு மற்றும் பசுமைகாண்காட்சியை ஏற்படுத்தி வருகிறார்கள்.
கீழக்கரை அன்புநகர் 2வதுதெருவை சேர்ந்தவர் அசோகன், சாந்தி தம்பதியினர் கடந்த 6 வருடங்களாக நவராத்திரி விழாவிற்காக நடக்கும் 10 நாட்கள் கொலு விஷேசத்திற்கு வீட்டின் ஒருபகுதியில் 9 படிகளுடன் சுவாமி பொம்மைகள் மற்றும் இதர பொருட்களுடன் அலங்கரித்துள்ளார்.
தினமும் மாலை 6 முதல் இரவு 8 மணிவரை நடக்கும் அம்மன் பாடல்களை பாடும் பஜனையில் ஏராளமான பெண்கள், சிறுமிகள் பங்கேற்கின்றனர்.
இதுபற்றி அசோகன், சாந்தி கூறியதாவது; பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல் வண்ணங்கள் தீட்டப்பட்ட களிமண் பொம்மைகளை மட்டுமே பயன்படுத்தி வருகிறோம்.சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பொருட்களை வரிசைப்படுத்தி, மண்ணின் வளம் காக்க ஒன்றிணைவோம், ஆன்மிகத்தின் மூலம்என்ற அடிப்படையில் பசுமை கொலு என பெயரிட்டுள்ளோம்.முதல்நாளில் முளைப்பாரி போட்டு, நிறைவு நாளில் பாரியாக நிறைவு செய்யப்படும்.






You must be logged in to post a comment.