தஞ்சாவூர் ராமநாதன் ரவுண்டானா அருகே தனியார் திருமண மண்டபத்தில் 40க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் இணைந்து மாபெரும் கல்வி கண்காட்சி நடைபெறுகிறது. இதில் தமிழ்நாட்டில் உள்ள எல்லா கல்லூரிகளுக்கும் மாணவர்கள் சென்று அங்கு இருக்கும் பாடத்திட்டங்கள், பாடபிரிவுகள், கல்விகட்டணம் தெரிந்து கொள்ளும் வகையில் வரும் ஏப்ரல் 27, 28 சனி, ஞாயிறு ஆகிய இரண்டு தினங்கள் நடைபெறுவதால் மாணவர்கள் கலந்து கொண்டு எல்லா விபரங்களையும் ஒரே இடத்தில் தெரிந்துகொள்ளலாம். இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவ, மாணவியருக்கு ஸ்கூட்டர், லேப்டாப், செல்போன், கல்வி உதவித்தொகை 5000 என்று ஏராளமான பரிசு காத்து இருக்கின்றன. மேலும் 12 ஆம் வகுப்பில் முதன்மை மதிப்பெண் பெரும் மாணவர்களுக்கு முழுக்கட்டணம் சலுகை, பெற்றோர் இல்லாதவர்களுக்கு முதல் தலைமுறை பட்டதாரிகள், விளையாட்டு வீரர்கள் மாணவர்களுக்கு கல்வி கட்டணம் குறைப்பு, படித்து முடிந்தவுடன் பெரிய நிறுவனங்களின் உடனடி வேலை வாய்ப்பு பேன்ற பல்வேறு சலுகைகள் ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளது. இந்த அறிய வாய்பை மாண மாணவிகள் பயன்படுத்தி மாபெரும் கல்வி கண்காட்சியில் பெருந்திரளாக கலந்து கொண்டு பயன் பெறுமாறு தெரிவித்துள்ளனார் .

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print








