திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் பெருங்குடி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது…

மதுரை விமான நிலைய விரிவாக்க பணிக்காக பரம்புபட்டி கிராமத்திற்கு செல்ல மாற்றுப்பதை ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட 21 திர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம்   ஊராட்சி ஒன்றியம் பெருங்குடி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 2ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராமங்களில் வரவு செலவு கணக்கு உள்ளிட்ட ஊராட்சியின் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்து கூட்டம் நடைபெறும் பெருங்குடி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பத்மா முருகேசன் துணைத்தலைவி விஜயலட்சுமி ராஜேந்திரன் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஒன்றிய கவுன்சிலர்கள்,  மற்றும்  திருப்பரங்குன்றம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அழகு மலை. சுகாதார ஆய்வாளர்  ஜெயக்குமார்  கிராம நிர்வாக அலுவலர்  அங்கன்வாடி உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை ஊழியர்கள் கிராம மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில்  பெருங்குடி ஊராட்சி செயலாளர் செந்தில் வேல்முருகன் தீர்மானங்களை வாசித்து கிராம மக்களின் ஒப்புதல் பெற்று திருப்பரங்குன்றம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகத்தில்  சமர்ப்பிக்க நிறைவேற்றப்பட்டது.

மதுரை விமான நிலைய  விரிவாக்க த்திற்காக பெருங்குடியின் உட்கிராமமான பரம்புபட்டி பகுதிக்கு விமான நிலைய விரிவாக்க பணியில் தடுப்பு சுவர் கட்டுவதால் பரம்புபட்டி மற்றும் நிலையூர் செல்வதற்காக புதிய சாலை அமைப்பதற்காக தீர்மானமும் பெருங்குடி ஊராட்சியில்  அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கு  நிலம் ஒதுக்குது குறித்த தீர்மானமும் நடப்பு நிதி ஆண்டிற்கான வரவு செலவு கணக்கு, முதியோர் கல்வி செயல்படுத்த கோரி  21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!