76 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட கருவேலம்பட்டியில் சிறப்பு கிராம சபை கூட்டம்..

மதுரை திருப்பரங்குன்றம் ஒன்றியம் நிலையூர் பகுதி 2 உட்பட்ட கருவேலம் பட்டியில் சுதந்திர தின விழா சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்க தாகூர் ஊராட்சி மன்ற தலைவர்யோகேஸ்வரி  முன்னிலையில் நடைபெற்றது அதில் ஊர் பொதுமக்கள் மூன்று கோரிக்கைகளை முன் வைத்தனர் திருமங்கலம் சுங்கச்சாவடியை அகற்றுதல், கருவேலம் பட்டி ரயில் தண்டவாளப்பகுதியில் சுரங்கப்பாதை அமைத்தல்.  மேலும் தங்கள் பகுதியில்  கல்யாண மண்டபம்  அமைத்து தரவேண்டி கிராம சபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. 

அப்போது ஊர் பொதுமக்களிடம் பேசிய எம்‌.பி மாணிக்க தாகூர் கூறும் போது இதனை  தனது நிதியிலிருந்து கல்யாண மண்டபத்தை கட்டித் தருவதாகவும்  ரயில் தள தண்டவாளத்தில் மேம்பாலம் அமைக்கும் பணி தொடர்பான நடவடிக்கை எடுப்பதாகவும் கப்பலூர் சுங்கச்சாவடியை வேறொரு இடத்துக்கு மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் தங்கள் பகுதியில் உள்ள பள்ளியில் கூடுதலாக  ஐந்து வகுப்பறைகள் கட்டும் பணி நடந்து கொண்டிருக்கிறது என  மாணிக்க தாகூர் உறுதி அளித்தார். மேலும் ஒவ்வொரு கிராம சபை கூட்டத்திலும் மக்கள் பங்கேற்று  தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!