இக்கிராம சபை கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், இணைய வழி மனைப்பிரிவு மற்றும் கட்டிட அனுமதி வழங்குதல், அயோடின் கலந்த உப்பை பயன்படுத்துதல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஜல்ஜீவன் இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டம், மாற்றுத் திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு உரிமைகள் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் இதர பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இக்கிராம சபை கூட்டங்களில் கிராம ஊராட்சிகளின் அனைத்து பொது மக்களும் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் துரை. இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
தென்காசி மாவட்டத்தில் கிராம சபை கூட்டம்; மாவட்ட கலெக்டர் தகவல்..
தென்காசி மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் துரை. இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்த மாவட்ட ஆட்சியரின் செய்திக்குறிப்பில் அரசாணை (நிலை) எண்.245, ஊரக வளர்ச்சி (சி.1) துறை, நாள் 19.11.1998 மற்றும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 3-ன்படி, சுதந்திர தினமான 15.08.2023 அன்று காலை 11.00 மணியளவில் தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.

You must be logged in to post a comment.