நெல்லை மாவட்டம் வீரசிகாமணி ஊராட்சியில் குடியரசு தினவிழா மற்றும் கிராம சபை கூட்டம்..

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியம் வீரசிகாமணி ஊராட்சியில் குடியரசு தினத்தை முன்னிட்டு கிராமசபைக் கூட்டம் வடநத்தம்பட்டி என்ற கிராமத்தில் சிறப்பாக நடைபெற்றது.

ஊராட்சி செயலர் திரு.லட்சுமணன் கூட்டத்தை நெறிப்படுத்தினார். பற்றாளர் திரு. V.ஆறுமுகச்சாமி கிராம நிர்வாக அலுவலர் திரு.குருசாமி மற்றும் ஊரின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பிற துறை அலுவலர்கள் கலந்து சிறப்பித்தனர்.

இக்கூட்டத்தில் ஊராட்சி செயலர் லட்சுமணன் ஊராட்சியின் வரவு செலவு அறிக்கையை வாசித்தார். பொதுமக்களின் அடிப்படையான மிக முக்கிய விஷயங்கள், கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

1.பிளாஸ்டிக் பயன்பாட்டு தடை.

2.குடிநீர் சிக்கனமாக பயன்படுத்துதல்

3.டெங்கு தடுப்பு நடவடிக்கைகள்

4.ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம்

5.பொது சுகாதாரம்

6.தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்.

7.மகளிர் திட்டம்.

8.பொதுமக்களின் இதர கோரிக்கைகள்.

9.வீரசிகாமணி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் பல்வேறு திட்டப்பணிகள்..

இவைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக நாட்டின் 70-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு ஊராட்சி அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!