தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே கெண்டையன அள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதூர் கிராமத்தில் 70-வது குடியரசு தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடைப்பெற்றது.
இதில் தருமபுரி மாவட்ட கலெக்டர் மலர் விழி அவர்கள் கலந்துக் கொண்டு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தினார் . இதுகுறித்து பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்த பிறகு மக்களின் பிரதான கோரிக்கையான குடிநீர் பிரச்சனைகளை மனுக்கள் பெற்று ஒரு மாதத்தில் தீர்வு காணப்படும் மென கூறினார். மேலும் கழிவறைகள் கட்டாத வீடுகளுக்கு பிப்ரவரி மாதம் இறுதிக்குள் அனைவருக்கும் கழிவறைகள். கட்டித் தரப்படும் என்று உறுதியளித்தார். மேலும் மாவட்ட கலெக்டர் கூறும்பொழுது தருமபுரி மாவட்டத்தை பிளாஸ்டிக் நெகிழிகள் (பிளாஸ்டிக் கவர்) இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும் .நீர் நிலைகள் வரண்டு போக மக்காத பிளாஸ்டிக் கவர்கள் தான் காரணம் என பலருக்கு புற்றுநோய் வர காரணம் இந்த மக்காத பிளாஸ்டிக் கவர்கள் தீயிட்டு எறிப்பதால் வெளிவரும் வாயுவே காரணம் என பேசினார்.
குடிநீர் பிரச்சனை, பட்டா வேண்டுதல், உதவித் தொகை வேண்டி ஏராளமான மனுக்கள் மாவட்ட கலெக்டர் யிடம் பொதுமக்கள் வழங்கினர். இதில் மாவட்ட திட்ட இயக்குனர் காளிதாஸ், வட்டாட்சியர் பிரசன்ன மூர்த்தி வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் கெண்டையன அள்ளி விஏ ஒ குமரேசன் மற்றும் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.
தர்மபுரி செய்தியாளர். என். ஸ்ரீதரன்

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print












