காட்பாடி அடுத்த மெட்.டுக்குளத்தில் 70-வது குடியரசு தினம் முன்னிட்டு நடந்த கிராம சபா கூட்டத்தில் வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் பங்கேற்றார்.
வேலூர் அடுத்த காட்பாடி மெட்டுக்குளம் ஊராட்சியில் கிராம சபா கூட்டம் நடந்தது இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் பங்கேற்று கிராம சுகாதாரம் , கழிப்பிட வசதி, குடிநீர் “குழந்தை தொழிலாளர் யின்மை மற்றும் பிற மக்கள் பிரச்னைகளை கேட்டறிந்தார்.
இதில் வேலூர் மற்றும் திருவண்ணாமலை தனி துணை ஆட்சியர் (முத்திரை கட்டணம்) தினகரன், காட்பாடி சமூகநலதாசில்தார் நரசிம்மன் வருவாய் ஆய்வாளர் உதயகுமார் பிடிஓ செந்தாமரை துணை பிடிஓ சசிகலா மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வின் ஏற்பாட்டை மெட்டுக்குளம் ஊராட்சி செயலாளர் சரவணன் செய்து இருந்தார்
வேலூரிலிருந்து கே.எம்.வாரியார்





You must be logged in to post a comment.