2024- 2025 ஆம்ஆண்டின் மதுரை வருவாய் மாவட்ட தடகளப்போட்டிகள் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் உசிலம்பட்டி அருகே உள்ள கே.பெருமாள்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் 8 பேரகள் ஈரோட்டில் நடைபெறும் மாநில போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளனர் .தடகள விளையாட்டுப் போட்டியில் 14 வயது பிரிவு மாணவிகள் மித்ரா வட்டு எறிதலில் இரண்டாம் இடமும் செளமியா 400 மீ ஓட்டம் இரண்டாம் இடமும் 4×100 மீ தொடரோட்டம் மூன்றாவது இடம் 17 வயது பிரிவு மாணவன் எம்.ஜீவா 800 மீ முதல் இடம் ஆதிகேசவன் 200 மீ முன்றாம் இடம் 17 வயது மாணவர்கள் 4×400 மீ, தொடரோட்டம் முதல் இடம் ஜீவா ஆதி சுந்தர் ஜெகன் 4×100 மீ இரண்டாம் இடம் சூபர்த்தியன் ஆதி, ஜெகன் ஜீவா ஆகியோர் கலந்துகொண்டு வெற்றி பெற்றனர்.வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை கே பெருமாள்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செ.ச சரவணகுமார் மற்றும் உடல்கல்வி ஆசிரியர் இராஜேந்திரன் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் வாழ்த்தினார்.
உசிலை மோகன்
You must be logged in to post a comment.