இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை செயலாளர் வீரராகவராவ் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் விஷ்ணு சந்திரன் முன்னிலை வகித்தனர். அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் திறந்து வைத்தார்.
அவர் பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க ரூ.111 கோடி மதிப்பில் புதிதாக 10 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் 90 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் இருந்து வந்த நிலையில் 3 ஆண்டுகளில் மட்டும் புதிதாக 23 தொழிற் பயிற்சி நிலையங்கள் துவங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் தமிழ்நாட்டில் 13 ஆயிரம் மாணவ, மாணவியர் ஆண்டுக்கு கூடுதலாக படித்து பயன்பெற்று வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் அரசு தொழிற்பயிற்சி மையத்தில் படித்த 90% மாணவ, மாணவியர் அரசு பணிக்கு சென்று வருகின்றனர். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் படித்த மாணவ, மாணவிகளுக்கு 90% வேலை வாய்ப்பை பெற்று தந்தவர் தமிழ்நாடு முதலமைச்சர். கடந்த காலங்களை விட அதி நுட்ப தொழில்நுட்பங்களை இயக்கும் வகையில் புதிய வகை கல்விகளை கற்று பயன்பெறும் வகையில் 40 தொழில்நுட்ப கல்வி 71 அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களிலும் 4.0 தொழில் நுட்ப கல்வி செயல்படுத்தப்படும்.
இத்தகைய கல்வி மூலம் அரசு தொழிற் பயிற்சி கல்வி மூலம் அரசினர் தொழிற் பயிற்சியில் படிக்கும் மாணவ, மாணவிகள் ஒவ்வொரு ஆண்டும் 90% பேர் பணிக்கு செல்கின்றனர். நான் முதல்வன் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம் ஆகும். புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வர் திட்டத்தில் ரூ.1000/- வழங்குவதுபோல் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கூடுதல் கல்வி உதவி தொகை ரூ.79/- வீதம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் மூலம் 230 வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு அதன் மூலம் 2,26,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் சி.வெகனோசன் தெரிவித்தார்.
ராமநாதபுரம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், முருகேசன், பரமக்குடி சார் ஆட்சியர் அபிலாஷா கெளர்,, மண்டல பயிற்சி இணை இயக்குநர் மகேஸ்வரன், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் வேலுச்சாமி, கமுதி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் தமிழ்செல்வி போஸ், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் வாசுதேவன், சசிகுமார், அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்கள் தஹரிகுமார், வாழைஆனந்தம், தபாலைய்யா, கமுதி வட்டாட்சியர் காதர் மொய்தீன், கமுதி ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் சித்ரா தேவி அய்யனார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.