மதுரை மாவட்டம் உசிலம்பட்டியிலிருந்து நேற்று இரவு பேரையம்பட்டிக்கு அரசுப்பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றி சென்று கொண்டிருந்தது.பேருந்து டிரைவர் பாண்டி என்பவர் ஓட்டி வந்துள்ளார்.பேருந்து எழுமலை புல்லுக்கடை மைதானத்தின் அருகே சென்ற போது சில இளைஞர்கள் தங்கள் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு அருகில் நின்று கொண்டிருந்தனர்.பேருந்து செல்ல வாகனத்தை எடுக்குமாறு டிரைவர் பாண்டி ஹாரன் அடிக்க இருசக்கரவாகனத்தை எடுக்க மறுத்து டிரைவர் மற்றும் நடத்துனரை கெட்டவார்த்தையால் திட்டி அடிக்கச் சென்றுள்ளனர்.அனைவரும் மது மற்றும் கஞ்சா போதையில் இருப்பது தெரியவந்தது.இது குறித்து அரசுப் பேருந்து டிரைவர் பாண்டி நடத்துனர் நெப்போலியன் எழுமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.தற்போது இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

You must be logged in to post a comment.