தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு தொழில்நுட்ப சார்பு ஆய்வாளர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் ..

தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படவுள்ள தொழில்நுட்ப சார்பு ஆய்வாளர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் சிறப்பு வல்லுநர்கள் உதவியுடன் 28.07.2018 முதல் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது.

பட்டப்படிப்பு மற்றும் பட்டய வகுப்பில் மின்பொறியியல் மற்றும் தகவல் தொடர்பு (ELECTRONICS AND COMMUNCATION ENGINEERING)பிரிவில் தேர்ச்சி பெற்ற பொதுப்பிரிவில் 28 வயதிற்குட்பட்டவர்களும் பிற்படுத்தப்படட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் பிரிவில் 30 வயத்திற்குட்பட்டவர்களும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் பிரிவில் 33 வயத்திற்குட்பட்டவர்களும் இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளலாம். திறமைவாய்ந்த சிறப்பு வல்லுநர்களுடன் நடத்தப்படும் இப்பயிற்சி வகுப்பில் பாடக்குறிப்புகள் இலவசமாக வழங்குவதுடன் ஒவ்வொரு வாரமும் மாதிரித் தேர்வும் நடத்தப்படும்

தற்பொது தமிழ்நாடு காவலர் பணியில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணிமுடித்த காவலர்களும் இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளலாம்.  மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன் தெரிவித்துள்ளார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!