அரசு பள்ளி மாணவர்களுக்கு தாகம் தீர்க்க குடிநீர் உபகரணம்…

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் மரைக்காயர்பட்டினம் துவக்கப்பள்ளியில் பயின்ற பழைய மாணவர்கள், அப்பள்ளி மாணவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உபகரணம் வழங்கினர்.

இப்பள்ளி தலைமை ஆசிரியராக 2 மாதங்களுக்கு முன் பொறுப்பேற்ற பொன்.ரவிச்சந்திரன், ஆசிரியர் பாலசுப்ரமணியன் ஆகியோர் மரைக்காயர் பட்டினம் கிராம முக்கியஸ்தர்கள், இளைஞர்கள், மரைக்காயர் பட்டினம் ஜமாத்தாரிடம் வேண்டுகோள் வைத்தனர். சரியாக 2 மாதத்தில் பள்ளிக்கு 1000 லிட்டர் சின்டெக்ஸ் தொட்டி. ரூ.4500 மதிப்புள்ள V – Guard motor bumb. ரூ.12,500 மதிப்புள்ள குடிநீர் சுத்திரிப்பு உபகரணம் பள்ளிக்கு வழங்கினர். இம்முயற்சிக்கு தவ்ஹீத் ஜமாத், பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா இளைஞர்கள் உதவியுள்ளனர்.

பள்ளிக்கு தாகம் தீர்த்த பழைய மாணவர்கள், பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் மற்றும் இளைஞர்களை மரைக்காயர்பட்டினம் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர், மாணவர்கள் நன்றி பாராட்டி மகிழ்ந்தனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ், இராமநாதபுரம்

——-/———————-

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!