தென்காசி மாவட்டம் முதலியார்பட்டியில் அமைந்திருக்கும் கடையம் ஊராட்சி ஒன்றிய அரசு மேல்நிலைப் பள்ளியில் 2023 -2024ஆம் கல்வி ஆண்டில், பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு, 12ஆம் வகுப்பில், சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு, சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது. முதலியார் பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு ஆயத்தக் கூட்டம் நடந்தது, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் அலாவுதீன் தலைமை தாங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியை முத்துலட்சுமி நாச்சியார் வரவேற்றார், சமூக நல்லிணக்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கட்டி அப்துல் காதர் வாழ்த்துரை வழங்கினார். பள்ளி மேலாண்மை குழு சம்பந்தமாக ஆசிரியை மகாலட்சுமி விரிவாக பேசினார்.



நிகழ்ச்சியில் பத்தாம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த கிருத்திகா, நஜீலா ஜீனத், மகா புவனேஸ்வரி, ஆகிய மாணவிகளுக்கும், பதினொன்றாம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த பதருன் நிஷா, ஹாஜராள் தஸ்னீம், சுகைனா ஜெசிமா பானு, ஆகிய மாணவிகளுக்கும், 12-ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த முகமது ரேஷ்மா, முகமது ஆசிக், பர்ணிகா ஆகிய மாணவ மாணவிகளுக்கும், சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது. பரிசுகளை சங்கரன், பிரம்ம நாயகம், மாடசாமி, யாகூப், செய்யது அலி, ஜன்னத், ஆகியோர் வழங்கினர். ஆசிரியர் முத்துராஜ் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் பெற்றோர்கள், மாணவ மாணவிகள், அனைவரும் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.