செங்கோட்டை பகுதியில் சமூக நல ஆர்வலர்களால் புணரமைப்பு செய்யப்பட்ட அரசு பள்ளி வகுப்பறை கட்டிடம் பள்ளி குழந்தைகளால் ரிப்பன் வெட்டி திறந்து வைக்கப்பட்டது. தென்காசி மாவட்டம் செங்கோட்டை கச்சேரி காம்பவுண்ட் அரசு நடுநிலைப் பள்ளியில் வகுப்பறை கட்டிட புணரமைப்புப் பணி முடிவுற்று அவ்வகுப்பறை மாணாக்கர் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் விழா நடைபெற்றது.



விழாவிற்கு தென்காசி மாவட்ட கல்வி அலுவலர் ஜெயப்பிரகாஷ் தலைமை வகித்தார். வட்டாரக் கல்வி அலுவலர் ஜான் பிரிட்டோ, ஆசிரியர் பயிற்றுனர் சுப்புலெட்சுமி, குழு ஒருங்கிணைப்பாளர் வெங்காடம்பட்டி திருமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இவ்விழாவில் பள்ளித் தலைமை ஆசிரியர் பீட்டர் ஜூடு அனைவரையும் வரவேற்றார். விழா நிகழ்ச்சிகளை ஆசிரியை சரவணப்பிரியா தொகுத்து வழங்கினார். பள்ளியின் வகுப்பறை கட்டிடத்தை பள்ளி குழந்தைகள் ஆர்வத்துடன் திறந்து வைத்தனர்.
மேலும் புணரமைப்புப் பணிக்கு உதவிகள் வழங்கி விழாவில் கலந்து கொண்ட தினமலர் நாளிதழ் திருநெல்வேலி மண்டல நிர்வாக இயக்குனர் தினேஷ், செங்கோட்டை மருத்துவர்கள் திருவன், சாந்தி திருவன், செங்கோட்டை காந்தியவாதி விவேகானந்தன், சுற்றுச்சூழல் விஞ்ஞானி விஜயலட்சுமி, திமோர் PEACE மருத்துவப் பல்கலைக்கழக பேராசிரியர் ஐசக் பாஸ்கர், வெங்கடாம்பட்டி பல் மருத்துவர் ஏகலைவன், வெங்கடாம்பட்டி சாந்தி திருமாறன், பள்ளி முன்னாள் ஆசிரியர் டேனியல் மற்றும் மேலகரம் மாரியம்மாள் ஆகியோருக்கு மாணவ மாணவிகளால் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் பத்மாவதி, மேரி புஷ்பலதா, ஞானசெல்வம், கிறிஸ்டியா ஆனஞந்த ஜமீலா, வாசுகி, கிருஷ்ணவேணி, ஸ்டெல்லா கண்மணி, தட்சிணாமூர்த்தி, மாரியப்பன் மற்றும் சண்முகத்தாய் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். பள்ளி ஆசிரியை ஷோபா நன்றி கூறினார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.