தென்காசி மாவட்டம், செங்கோட்டை SRM அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 22.11.2025 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.24 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 கூடுதல் வகுப்பறை கட்டடத்தினை திறந்து வைத்து பார்வையிட்டார்.

தென்காசி மாவட்டம், செங்கோட்டை SRM அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த இஸ்ரோ விஞ்ஞானி (முன்னாள் மாணவி 1974-1981) நிகர்ஷாஜி ரூ. 24 இலட்சம் பங்களிப்புடன் நமக்கு நாமே திட்டத்தில் 2 கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவரால் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரேணுகா, செங்கோட்டை நகர்மன்ற தலைவர் இராமலட்சுமி. நகராட்சி ஆணையாளர் செல்வராஜ், பொறியாளர் முகைதீன் அபூபக்கர், தலைமையாசிரியர் ஜீவா மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்


You must be logged in to post a comment.