திருச்சி திருவெறும்பூர் பகுதிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்…

3 கோடியே 85 லட்சத்து ஐயாயிரம் ரூபாய் மதிப்பீட்டில்முடிவடைந்த திட்ட பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.  தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தனது தொகுதிக்கு உட்பட்ட குண்டூர் ஊராட்சியில் உள்ள திருவளர்ச்சிபட்டி கிராமத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட அரசு துணை சுகாதார நிலையத்தை திறந்து வைத்ததுடன் சுகாதார நிலையத்திற்கு வந்திருந்த கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கியும், உணவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினார் மேலும் இதனை அடுத்து குண்டூர் ஊராட்சி அய்யன்பத்தூர் கிராமத்தில் உள்ள நெசவாளர் காலனி பகுதியில் பல ஆண்டு காலமாக அப்பகுதி மக்கள் நடப்பதற்கு மிகவும் சிரமப்பட்டு வந்தனர் மேலும் இதனை அடுத்து அமைச்சரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்ததை எடுத்து 2 கிலோ மீட்டர் அளவிற்கு புதிய தார் சாலை அமைக்கும் பணி முடிவுற்று நேற்று அதையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார் மேலும் இதனை அடுத்து அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார்.

மேலும் சூரியூர் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட அரசு துணை சுகாதார நிலையத்தையும் திறந்து வைத்ததுடன் சோழமாதேவி ஊராட்சியில் புதியதாககட்டி முடிக்கப்பட்ட சமுதாயகூடத்தையும் மக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் திறந்து வைத்தார்.

மேலும் இதே போல் நவல்பட்டு ஊராட்சி நவல்பட்டு புதுத்தெரு கிராமத்தில் பல ஆண்டுகளாக இருந்த உய்யகொண்டான் ஆற்றுப் பாலம் பழுதடைந்ததையடுத்து புதியதாக கட்டி முடிக்கப்பட்டபுது பாலத்தை நேற்று மக்கள் பயன்பாட்டிற்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திறந்து வைத்தார்.

மேலும் இந்நிகழ்வில்ஊராட்சிகள் திட்ட இயக்குனர் கங்காதரணி திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கங்காதரன் திருவெறும்பூர் ஒன்றிய குழு தலைவர் சத்யா கோவிந்தராஜ் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி திருமுருகன் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகசுந்தரம், உட்பட அரசு அதிகாரிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருச்சி செய்தியாளர் H.பஷீர்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!