ராமநாதபுரத்தில் 991 பேருக்கு ரூ.2.66 கோடி மதிப்பில் நலத்திட் உதவிகள் பால் வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்..

இராமநாதபுரம் : இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு  தமிழக அரசின் பல்வேறு துறைகள் சார்பில் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

இதையொட்டி,  ராமநாதபுரத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு ராமநாதபுரத்தில் நடந்தது மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தலைமை வைத்தார். இதில் ஆதிதிராவிட நலத்துறை சார்பில் 92 பேருக்கு வீட்டுமனை பட்டா, 10 பேருக்கு தையல் இயந்திரம், 3 பேருக்கு சலவைப் பெட்டி, இருவருக்கு இலவச வீட்டு மனை பட்டா, தாட்கோ மூலம் 5 பேருக்கு திருமண உதவித்தொகை, 250 பேருக்கு நலவாரிய அட்டை, 45 பேருக்கு தொழில் முனைவோர் கடன், வருவாய், பேரிடர் மேலாண் துறை சார்பில் 200 பேருக்கு மின் பட்டா, 3 பேருக்கு பட்டா மாறுதல், ஊரக வாழ்வாதார மகளிர் திட்டம் சார்பில் 13 பேருக்கு சமுதாய முதலீட்டு நிதி, 65 பபெண்களுக்கு தொழில் முனைவோர் கடன், கூட்டுறவு உணவு, நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் 20 பேருக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை, 6 பேருக்கு கால்நடை பராமரிப்பு கடன், 10 பேருக்கு விவசாய கடன் அட்டை, தொழில் வணிக துறை (மாவட்ட தொழில் மையம்) சார்பில் 5 பேருக்கு அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம், பிரதம மந்திரி வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்ட நிதி, தோட்டக்கலை, மலை பயிர்கள் துறை சார்பில் 9 பேருக்கு நலத்திட்ட உதவி, வேளாண் பொறியியல் துறை சார்பில் ஒருவருக்கு டிராக்டர் இயந்திரம் ராமநாதபுரம், ராமேஸ்வரம் கீழக்கரை பரமக்குடி நகராட்சிகள் சார்பில் தலா 10 பேருக்கு ஒளிரும் சட்டை, கையுறை, முகயுறை என 991 பேருக்கு ரூ.2 கோடியே 65 லட்சத்து 99 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜுலு, சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் வேலுச்சாமி, திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் புல்லாணி, ஆதிதிராவிடர் நலத்துறை துணை ஆட்சியர் செல்வி, பிற்பட்டோர் நலத்துறை அலுவலர் மாரிமுத்து, மாவட்ட தொழில் மைய மேலாளர் திரிபுர சுந்தரி, வட்டாட்சியர்கள் வரதன், ஸ்ரீதர் மாணிக்கம், சண்முகசுந்தரம், நகராட்சி ஆணையர்கள் கண்ணன், அஜிதா பர்வீன், கடலாடி வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயஆனந்த், பேரூராட்சி செயல் அலுவலர்கள் மாலதி செல்வராஜ், திருப்பதி, நீலகண்டன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!