இராமநாதபுரத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் சிறப்பு முகாம்: மாவட்ட ஆட்சியர் ஆலோசனை கூட்டம்..

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ராமநாதபுரத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் அரசு நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு சென்றடைவது குறித்து மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் ஆய்வு  செய்தார். 

இராமநாதபுரத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் வளர்ச்சித் திட்டப்பணிகள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் செயல்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்து அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் அலுவலர்கள் மேற்கொண்ட ஆய்வு குறித்து கேட்டறிந்ததுடன் பொதுமக்களை சந்தித்து மனுக்கள் பெற்று மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் அரசின் திட்டப்பணிகள் குறித்து கேட்டறிந்தார். ஒவ்வொரு துறை அலுவலரும் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ராமநாதபுரத்தை ஆய்வு செய்து அதன் மூலம் மேற்கொள்ள வேண்டிய பணிகளை கண்டறிந்தால் உடனடியாக பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார், அரசு நலத்திட்டங்கள் பயனாளிகளுக்கு முழுமையாக சென்றடைய வேண்டும் என்பதே. ஒவ்வொரு துறை அலுவலரும் தங்கள் திட்டங்கள் தொடர்பாக மக்களை சந்தித்து அவர்களுக்கு தேவையான வழிகாட்டலை மேற்கொள்ள வேண்டுமென அரசு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அறிவுறுத்தினார்.

ராமநாதபுரத்தில் வேளாண் துறை செயல்படுத்தி வரும் உயிர் உரம் உற்பத்தி மையத்தை பார்வையிட்டு விவசாயிகள் பயன்பெறும் வகையில் தேவையான அளவிற்கு உயிர் உரங்கள் உற்பத்தி செய்து வழங்க வேண்டுமென வேளாண் துறை அலவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் அறிவுறுத்தினார்.

இந்திரா நகர் ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியை பார்வையிட்டு உணவு பொருட்களை சுகாதாரமான முறையில் வழங்கிட பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார். அதனைத்தொடர்ந்து மாணவர்களிடம் கல்வித்திறன் குறித்து கேட்டறிந்து கலந்துரையாடினார். மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, உதவி ஆட்சியர் (பயிற்சி) முஹமது இர்பான், வேளாண் துறை இணை இயக்குநர் மோகன்ராஜ், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் ராஜமனோகரன், மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் தனலட்சுமி, மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் செல்வி ராமநாதபுரம் வட்டாட்சியர் சாமிநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!