மக்கள் குறை தீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள்..

இராமநாதபுரம்:  இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர் நாள் கூட்டம் இன்று நடந்தது. இதில் 322 பேர் தங்களில் பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோனிடம் வழங்கினர். இதில மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் 6 பேருக்கு ரூ.62 ஆயிரம் மதிப்பில் உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜித் சிங் காலோன் வழங்கினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, முதன்மை கல்வி அலுவலர் சின்னராசு, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் தனலட்சுமி, மாவட்ட வழங்கல் அலுவலர் இளங்கோ, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பாலசுந்தரம், துணை ஆட்சியர் (பயிற்சி) கோகுல் சிங் உடனிருந்தனர்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!