இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் ரெகுநாதபுரம் ஊராட்சியில் வருவாய், பேரிடர் மேலாண் துறை சார்பில் மக்கள் தொடர்பு முகாம் இன்று நடைபெற்றது. இதில் ரெகுநாதபுரம் ஊராட்சி கிராம மக்களிடம் கோரிக்கைகள் தொடர்பாக பெறப்பட்ட 180 முன் மனுக்கள் மீது அரசின் பல்வேறு துறைகள் மூலம் நடவடிக்கை எடுத்து 146 பயனாளிகளுக்கு ரூ1.18 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜித் சிங் காலோன் வழங்கினார். ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் ராஜமனோகரன். வட்டாட்சியர் ஜமால் முஹமது, திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் புல்லாணி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் தனலட்சுமி, திருப்புல்லாணி வட்டார வளர்ச்சி ஆணையர் ராஜேஸ்வரி, ரெகுநாதபுரம் ஊராட்சி தலைவர் கோபாலகிருஷ்ணன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

You must be logged in to post a comment.