திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சுற்றுபகுதி மற்றும் ஒட்டன்சத்திரம் பகுதி மக்கள் பயன்பெரும் வகையில் பாளையம் பகுதியில் இருந்து காவேரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக புதுரோடு, எரியோடு, வடமதுரை, கென்டையகவுண்டனூர் மற்றும் ஒட்டன்சத்திரம் அருகே காளாஞ்சிபட்டி ஆகிய பகுதிகளில் இரவு பகல் என ஆயிரகணக்காண லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது. இதேபோல எரியோடு பகுதியில் இரவு பகலாக வீணாகும் குடிநீரை அப்பகுதி சமுகவிரோதிகள் மின் மோட்டார்கள் வைத்து குடிநீரை திருடிவருகிறார்கள். இது சம்ந்தமாக நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் ஒப்பந்ததாரர்கள் அதிகாரிகளை அழைத்து சேனான்கோட்டை பகுதியில் காவேரி நிருந்து நிலையத்தில் கிடாவெட்டி விருந்து வைத்து உபசரிப்பு விழா கொண்டாடி வருகிறார்கள்.
இதற்கு இப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இது சம்ந்தமாக செய்திக்காக சென்ற செய்தியாளர்களுக்கு விளக்கம் கொடுத்த காவேரி கூட்டு குடிநீர் திட்டத்தின் திண்டுக்கல் மாவட்ட அதிகாரி ஈஸ்வரன் என்பவர், “நாங்க ஏதோ பணி சிறப்பாக நடைபெற கெடா வெட்டி வருகிறோம் அதைவிட்டு லூசுத்தனமாக படம் எடுத்துட்டு வர்ரீங்க” என்று செய்தியாளர்களை ஒருமையில் பேசியதால் பரபரப்பு ஏற்ப்பட்டது.
மேலும் அரசுக்கு சொந்தமான இடத்தில் கிடாவெட்டி ஒப்பந்ததாரர்கள் மற்றும் அதிகாரிகள் கும்மாளம் அடித்து கொண்டாடிவருவது பொதுமக்களுக்கிடையே பெரும் அதிருப்தியை ஏற்ப்படுத்தியுள்ளது, இத்தகையான அதிகாரிகளுக்கான விருந்து உபசரிப்பு ஒப்பந்ததார்கள் தங்கள் பணியை சரிவர செய்யாமல் அதிகாரிகளிடம் நற்பெயர் பெறும் வகையில் காக்கா பிடிக்கும் செயல் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்க்கு தலையாட்டும் வகையில் அதிகாரிகள் கிடாவெட்டு கொண்டாட்டத்தில் கலந்துகொண்டது வேடிக்கையாக இருந்தது. இது சம்ந்தமாக மாவட்ட ஆட்சியர் சம்ந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்,
செய்தியாளர்:- ரமேஷ்பண்டாரி மற்றும் J.அஸ்கர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print











