திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா சித்தையன் கோட்டையில் இயங்கி வரும் DD36 எண் உள்ள கூட்டுறவு கடன் வேளாண்மை சங்கத்தில் பொதுமக்கள் நலன்கருதி தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து வேலை நாட்களிலும் பெறப்படும் கணினி வழி சான்றிதழ்களை வாரத்தில் மூன்று நாட்களான திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று கிழமை நாட்களில் மட்டுமே! பெற்றுத்தரமுடியும் மற்ற நாட்களில் ஆத்தூர் தாலுகா அலுவலகத்தில் சென்று பதிவுசெய்து கொள்ளுங்கள் என்று சான்றிதழ் பதிவுசெய்ய வரும் பொதுமக்களை திருப்பி அனுப்பி அலைக்கழிப்பு செய்கிறார்கள்.
தற்போது, பள்ளி விடுமுறை காலம் முடிந்து திறக்கப்படும் நாளில் மாணவர்கள் மற்றும் மாணவியர் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளுக்காக சான்றிதழ்கள் பெறக்கூடிய காலம். மேலும், அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களும் DD36 கூட்டுறவு கடன் வேளாண்மை சங்க பனியாளர்களின் தன்னிச்சையான போக்கினால் மிகுந்த அவதியும் அலைகழிப்புக்கும் உள்ளாகும் நிலைஉள்ளது.
தமிழக அரசு பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையிலும் அறிவிக்கப்படும் நல்ல பல திட்டங்கள் இதுபோன்ற ஒருசிலரின் தன்னிச்சை போக்கான செயல்பாட்டினால் பாலடிக்கப் படுகிறது என்பதே உண்மை.
ஆகவே, துறைசார்ந்த அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு பொதுமக்கள் நலன்கருதி அனைத்து வேலைநாட்களிலும் சான்றிதழ் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்து உதவிடுமாறு பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









