கடையநல்லூரில் அரசு மகளிர் கல்லூரி அமைக்க வேண்டும்; தென்காசி மாவட்ட கலெக்டரிடம் முஸ்லிம் லீக் கோரிக்கை..

கடையநல்லூரில் அரசு மகளிர் கலை கல்லூரி அமைக்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தென்காசி மாவட்ட தலைவர் எம் அப்துல் அஜீஸ், மாவட்ட செயலாளர் ஏ.செய்யது பட்டாணி ஆகியோர் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை ரவிச்சந்திரனை 03-01-2024 அன்று நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அப்போது மாவட்ட முதன்மை துணை தலைவர் ஏ.அப்துல் வஹாப், மாவட்டத் துணைத் தலைவர் முகமது முஸ்தபா, தென்காசி நகர தலைவர் என்.எம் .அபூபக்கர், மூத்த பத்திரிகையாளர் மணிச்சுடர் புளியங்குடி சாகுல் ஹமீது ஆகியோர் உடன் இருந்தனர். கோரிக்கை மனுவில் கடையநல்லூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அதிகமான மக்கள் தொகை வசிக்கும் பகுதியாக கடையநல்லூர் உள்ளது. இந்த பகுதியில் பெண்கள் படிப்பை சரியான முறையில் தொடராமல் இருப்பதற்கு மகளிர் கலை கல்லூரி இல்லாத சூழ்நிலை உள்ளது. இப்பகுதியில் கல்லூரி அமைய வேண்டும் என்பது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். ஆகவே கடையநல்லூரில் கல்லூரி அமைய தமிழக அரசையும், உயர்கல்வித்துறை அமைச்சரையும் கேட்டுக் கொள்கிறோம்.

மேலும், புளியங்குடி மக்கள் தொகை 2011 ஆம் ஆண்டு கணக்கின் படி சுமார் 88 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட ஊராகும். ஆகையால் அரசு மருத்துவமனை மகப்பேறு வசதி 24 மணி நேரமும் இயங்கக்கூடிய வகையில் புளியங்குடி அரசு மருத்துவமனை தரம் உயர்த்த வேண்டும். கடையநல்லூர் தாலுகா அமைக்கப்பட்டு பலவருடங்கள் ஆகியும் அந்த தாலுகாவில் அரசு கருவூலம் இல்லை. இதனால் அரசு ஊழியர்களுக்கும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் சிரமம் உள்ளது. எனவே மிக விரைவாக கடையநல்லூர் தாலுகாவில் அரசு கருவூலம் அமைத்திட வேண்டுகிறோம். புளியங்குடியை சுற்று வட்டார பகுதியில் உள்ள கிராமங்களை ஒருங்கிணைத்தால் ஒரு லட்சத்துக்கு அதிகமான மக்கள் தொகை உள்ளது. ஆகையால் மக்கள் பயன்படும் விதமாக புளியங்குடியை தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும் என்பன போன்ற முக்கிய கோரிக்கைகள் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக மாவட்ட ஆட்சித்தலைவர் துரை ரவிச்சந்திரனிடம் மூத்த பத்திரிகையாளர் புளியங்குடி சாகுல் ஹமீது மணிச்சுடர் ரமலான் சிறப்பு மலரை வழங்கினார்.

செய்தியாளர்-அபுபக்கர் சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!