அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு..
இராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் இராமநாதபுரம் மீன்பிடி துறைமுக திட்ட உபகோட்டம் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் காலியாக உள்ள ஓர் அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு நேர்முகதேர்வு நடத்தப்படவுள்ளது.
அலுவலக உதவியாளர் பதவிகளுக்கு விண்ணப்பதாரர் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்ட தெரிந்து இருக்க வேண்டும். வயது வரம்பு 01.07.2016 அன்றுள்ளபடி கணக்கிடப்படும். சம்பள விகிதம் ரூ.4,800.00- ரூ.10,000.00, தர ஊதியம் ரூ.1300.00 ஆகும்.
இப்பணியிடத்திற்கு பிற்படுத்தப்பட்டோர் (பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்கள் தவிர) – முன்னுரிமை பெற்றவர்கள் 1 நபர் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
விண்ணப்பதாரரின் வயது வரம்பு 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். மேற்கண்ட பணியிடத்திற்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் செயற்பொறியாளர், மீன்பிடி துறைமுக திட்ட கோட்டம், 166, வடக்கு கடற்கரை சாலை, தூத்துக்குடி. என்ற முகவரியில் விண்ணப்பங்களை நேரில் பெற்று உரிய நகல் ஆவணங்களுடன் 04.05.2017 அன்று மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நேர்முக தேர்வுக்கான இடம் மற்றும் நாள் குறித்து விண்ணப்பதாரருக்கு பின்னர் தெரிவிக்கப்படும். இத்தகவலை இராமநாதபுரம் ஆட்சி தலைவர் நடராஜன் வெளியிட்டுள்ளார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









