விபத்தில் சிக்கி உயிரிழந்தவர் மகளுக்கு அரசு பணி வழங்கிய முதலமைச்சர்..

தென்காசி அருகே நடந்த கோர விபத்தில் சிக்கி உயிரிழந்தவரின் மகளுக்கு அரசு பணி வழங்கி உத்தரவு பிறப்பித்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். முதல்வரின் உத்தரவுக்கு இணங்க தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், தென்காசி மாவட்டம் துரைசாமிபுரத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் மல்லிகா உயிரிழந்ததைத் தொடர்ந்து அவரது வாரிசுதாரரும் மகளுமாகிய கீர்த்திகா (பார்வையற்ற மாற்றுத் திறனாளி) என்பவருக்கு புளியங்குடி நகராட்சியில் Data Entry Operator பணிக்கான ஆணையினை 26.11.2025 அன்று புளியங்குடி கற்பக வீதி தெற்கு 3-ஆவது தெருவில் உள்ள அவரது இல்லத்திற்கே நேரடியாக சென்று வழங்கினார்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில், கடந்த 24.11.2025 அன்று எதிர்பாராத விதமாக ஏற்பட்ட சாலை விபத்தில் பார்வையற்ற மாற்றுத் திறனாளி கீர்த்திகாவின் தாயார் மல்லிகா உயிரிழந்ததைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சரிடம் கீர்த்திகா கோரிக்கை வைத்ததற்கு இணங்க தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக அலைபேசியில் தொடர்பு கொண்டு கீர்த்திகாவிற்கு ஆறுதல் வழங்கி, உங்களுக்கான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்ற உத்தரவிற்கிணங்க புளியங்குடி நகராட்சியில் Data Entry Operator பணிக்கான ஆணை கீர்த்திகாவுக்கு வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

 

பின்னர் கீர்த்திகா பணி ஆணை பெற்றவுடன் தெரிவித்ததாவது, எனது கோரிக்கையினை தமிழ்நாடு முதலமைச்சர் கனிவுடன் கேட்டறிந்து, எனக்கு புளியங்குடி நகராட்சியில் Data Entry Operator பணிக்கான ஆணையினை மாவட்ட ஆட்சித் தலைவர் மூலம் வழங்கியுள்ளார். எனக்கு பணி ஆணை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் தமிழ்நாடு அரசுக்கும் எனக்கு பணி கிடைக்க பாடுபட்ட அனைத்து அரசு அலுவலர்களுக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

இந்நிகழ்வில், வாசுதேவ நல்லூர் சட்டமன்ற உறுப்பினர் தி.சதன் திருமலைக் குமார், புளியங்குடி நகர்மன்ற தலைவர் விஜயா சௌந்தர பாண்டியன், ஆணையாளர் நாகராஜ் ஆகியோர் உள்ளனர்.

 

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!