கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள் இவர்களுக்கு முறையான சம்பளம், இ எஸ் ஐ, பிஎப் போன்ற தொகைகளை வழங்காமலும் பணி உபகரணங்கள் வழங்காமலும் தொடர்ந்து கேட்டு வந்த நிலையில் இன்று மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் சிஐடியு ஒப்பந்த தூய்மை பணியாளர் ஆண்கள் பெண்கள் உள்ளிட்ட ஏராளமான தொழிலாளர்கள் தங்கள் பணிகளை புறக்கணித்துவிட்டு நகராட்சி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதியில் குப்பைகளை அகற்ற முடியாமல் பொதுமக்கள் அவதிப்படும் சூழல் உருவாகும் உடனடியாக சம்பந்தப்பட்ட தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை கேட்டு அறிந்து தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

You must be logged in to post a comment.