அரசு மருத்துவமனை என்பது மக்களிடம் இருந்து வசூலிக்கப்படும் வரிப் பணத்தில் மக்களுக்கு அனைத்து மருத்துவ வசதிகளும் இலவசமாக, அரசாங்க அதிகாரிகளால் எந்த பிரதிபலனும் எதிர்பார்க்கப்படாமல் பொது மக்களுக்கு சேவை செய்ய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டதாகும். ஆனால் நடைமுறை நிலைமையே வேறு, அங்கு பணிபுரியும் கடை நிலை ஊழியர் முதல் உயர் நிலை மருத்துவர்கள் வரை எந்த வகையிலாவது மக்களிடம் இருந்து பலன் கிடைக்குமா என்ற நோக்கத்திலேயே பணி புரியும் அவலம். அதன் உச்சக்கட்டம் சாதாரண விசயத்திற்கு கூட பொதுமக்களை அலைய விடும் அவலம்.
கடந்த வாரம் இராமநாதபுரம் மாவட்டத்தை சார்ந்த சிலர் கூறுகையில், நாங்கள் பெண்களை இராமநாதபுரம் மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்க சென்றால், நேரத்திற்கு வர வேண்டிய மருத்துவர்கள் பல மணி நேரம் தாமதமாக வந்து சிகிச்சையை தொடங்குகிறார்கள்.
அதே போல் பாதிக்கப்பட்ட இன்னொருவர் கூறுகையில் அரசு மருத்துவமனைக்கு நாங்கள் வருவதே, பொருளாதார சிக்கல் காரணமாக, இலவசமாக சிகிச்சை கிடைக்கும் என்பதால்தான், ஆனால் பிரசவம் ஆகும் சமயத்தில் தொப்புள் கொடியை கட்டுவதற்காக உபயோகப்படுத்தப்படும் கிட்டியை (CORD
CLAMP) எங்களை தனியார் மருந்து கடைகளில் இருந்து வாங்கி அவர் சொல்லுகிறார்கள், அந்த 25 ரூபாய் மதிப்புள்ள பொருளை வாங்க நாங்கள் இரவில் 200ரூபாய்க்கு மேல் ஆட்டோவுக்கு செலவு செய்து இரவு மருந்தகங்களில் வாங்க வேண்டிய சூழலுக்கு நாங்கள் தள்ளப்படுகிறோம். நாங்கள் சில நூறை சேமிக்க அரசு மருத்துவமனைக்கு வந்தால் எங்களை பல நூறு செலவு செய்ய வைத்து விடுகிறார்கள்” என மிகவும் வருத்தத்துடன் கூறினார்.
CLAMP) எங்களை தனியார் மருந்து கடைகளில் இருந்து வாங்கி அவர் சொல்லுகிறார்கள், அந்த 25 ரூபாய் மதிப்புள்ள பொருளை வாங்க நாங்கள் இரவில் 200ரூபாய்க்கு மேல் ஆட்டோவுக்கு செலவு செய்து இரவு மருந்தகங்களில் வாங்க வேண்டிய சூழலுக்கு நாங்கள் தள்ளப்படுகிறோம். நாங்கள் சில நூறை சேமிக்க அரசு மருத்துவமனைக்கு வந்தால் எங்களை பல நூறு செலவு செய்ய வைத்து விடுகிறார்கள்” என மிகவும் வருத்தத்துடன் கூறினார்.பொதுமக்களின் நலன் கருதி இராமநாதபுரம் மாவட்ட ஆட்சி தலைவரும், அரசாங்க அதிகாரிகளும் இந்த விசயத்தில் உடனடியாக தலையிட்டு, அரசாங்க மருத்துவமனை, மக்களின் நலனுக்காக பயன்படும் மருத்துவமனையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print










