மதுரை இராசாசி மருத்துவமனையில் தலைவிரித்தாடும் முறைகேடுகள்…

மதுரை இராசாசி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை தரையில் படுக்க வைத்தும், கட்டில் வசதி வேண்டும் என்றால் அதற்கு தனியாக கவனிக்க வேண்டும் இல்லையென்றால் தரையில் தான் படுக்க வேண்டும் என்று எழுதாத சட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

இதற்கு உதாரணம் அண்ணா பேருந்து நிலையம் அருகில் இருக்கும் அரசு மருத்துவமனை கட்டிடத்தின் நம்பர் 101 A வார்டு. அங்கு ஒருவர் கட்டிலில் வைத்து சிகிச்சை மேற்கொள்ளும்போது அங்கு வேறு ஒரு நோயாளி வரும் பட்சத்தில் ஏற்கனவே கட்டிலில் இருப்பவரை தரையில் அமர்த்திவிட்டு புதிதாக வரும் நபருக்கு சொந்த ஆதாயத்திற்காக மற்றவரை கட்டிலில் அமர்துகின்றனர்.  இதனால் வரும் ஏழை, எளிய மக்கள் பெரும் மனக்கசப்பிற்கும், வருத்தத்திற்கும் ஆளாகிறார்கள்.

உதாரணத்திற்கு சில தினங்களுக்கு முன்பு தரையில் வைத்து சிகிச்சை மேற்கொள்ளும் தன் மனைவிக்கு அளிக்கப்படும் குளுக்கோஸ் பாட்டிலை தன் கையிலேயே அது முடியும் வரை பிடித்துக் கொண்டு கணவர் நின்றது மிகவும் வேதனையான சம்பவம்.

அதே போல் நோயாளிகளை ஒரு வார்டில் இருந்து மற்றொரு வார்டுக்கு அல்லது பரிசோதனைக் கூடத்திற்கு அழைத்துச் செல்வதற்கான உபகரணங்களுக்கு கூட அங்கு பணிபுரியும் வேலை ஆட்கள் வரும் நோயாளிகளிடம் பிரதிபலன் இருந்தால் மட்டுமே அழைத்துச் செல்வோம் இல்லை என்றால் நீங்களே அழைத்து செல்லுங்கள் என்று தெரிவிக்கும் கொடுமையும் அரங்கேறுகிறது.

இதை தட்டிக் கேட்கும் பட்சத்தில் உங்களால் எதைச் செய்ய முடியுமோ செய்யுங்கள் இது மருத்துவமனை மேலிடத்திற்கு தெரிந்துதான் நடக்கிறது என்று தெரிவிகின்றனர். இதைக் கேட்கும் பொழுது மருத்துவமனை முதல்வருக்கு உண்மையிலேயே இங்கு நடப்பது பற்றி தெரியாதா அல்லது தெரிந்தும் தெரியாதது போல் நடந்து கொள்கிறாரா என்கிற சந்தேகத்தை எழுப்புகிறது.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

ஆசிரியர்

[email protected]

Recent News

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!