ரூ.2 ஆயிரம் பெற மண்டபம் பேரூராட்சியில் அலுவலகத்தில் விண்ணப்பத்துடன் குவியும் மக்கள்..

கடந்த 16/11/2018 ஆம் தேதி கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என தமிழக சட்டசபை கூட்டத் தொடரில் 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.

இதன் படி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அலுவலகங்களில் மக்கள் தொகை முந்தைய ஆண்டு வறுமைக் கோடு கீழ் உள்ளோர் பட்டியலில் உள்ள பயனாளிகளுக்கு இணைய தளம் மூலம் அரசு விண்ணப்பம் அனுப்பியது. இதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களுடன் வங்கி சேமிப்பு கணக்கு எண், ஆதார், ரேஷன் கார்டு, ஸ்மார்ட் கார்டு நகல் பெறப்பட்டு அரசுக்கு அனுப்பும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பட்டியலில் விடுபட்டுள்ள தொழிலாளர்கள் தங்கள் பெயரை வறுமை கோட்டிற்கு கீழுள்ளோர் பட்டியலில் பயனாளிகளாக சேர்க்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்நிலையை சமாளிக்க அதிகாரிகள் சிலரின் ஆலோசனையின் பேரில், விடுபட்ட பயனாளிகள் என விண்ணப்பிப் போரின் படிவங்களை பெற்றுக் கொள்ள முடிவு செய்தனர். இதன்படி, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சியில் 18,427 பேர் கொண்ட மக்கள் தொகையில் 998 பேர் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளனர். இவர்கள் தவிர எஞ்சியோர், ரூ.2 ஆயிரம் கோரி மண்டபம் பேரூராட்சி அலுவலகத்தில் விண்ணப்பம் வழங்கி வருகின்றனர். பொதுமக்கள் கூறுகையில், தமிழா அரசு வழங்கும் 20 கிலோ இலவச அரிசி வாங்கும் அனைவரும் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ளவர்கள் தான். ஆகையால், செல்வந்தர்கள், வருமான வரி செலுத்துவோர், அரசு ஊழியர்கள் தவிர அனைவருக்கும் ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும் என்றனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!