தமிழக ஆளுனர் இராமேஸ்வரம் வருகை..

தமிழக ஆளுனர்  சென்னையிலிருந்து சேது எக்ஸ்பிரஸ் இரயிலில் ஆளுநர் தனது குடும்பத்தார், உறவினர்கள் மற்றும் பிருந்தாவன் சாது விஜய்கோஷல் மஹாராஜ் ஆகியோருடன் ராமேஸ்வரம் அருள்மிகு இராமநாதசுவாமி கோயிலுக்கு வருகை தந்தார். அவர்களுக்கு திருக்கோயில் நிர்வாகம் சார்பில்  கோயில் குருக்கல் பூரண கும்ப மரியாதை செலுத்தி வரவேற்பு கொடுக்கப்பட்டது.

இதனையடுத்து கோவிலுக்குள் சென்ற கவர்னர் ஸ்படிகலிங்க பூஜையில் கலந்துகொண்டார். ஆளுனர் ராமேஸ்வரம் வருகையொட்டி ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட மதுரை மண்டலத்தை சேர்ந்த போலீசார் சுமார் 600க்கும் மேற்ப்பட்டோர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதைத் தொடர்ந்து கோவிலில் சாமி தரிசனம் முடித்த பின் ஆளுநர் மற்றும் குடும்பத்தார்கள் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மூத்த சகோதரர் முகமது முத்துமீரான் மரைக்காயரை சந்தித்து ஆசிபெற்றார். அதன் பின்பு தீர்த்தம் ஆட தனுஷ்கோடி அரிச்சல் முனைக்கடல் பகுதிக்கு புறப்பட்டுச் சென்றார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!