பழனியில் முருகப் பெருமான் கோயிலில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சாமி தரிசனம் செய்தார்..வீடியோ..

பழனி மலைக்கு 24/07/2018 அன்று இரவு 7.30 மணிக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் வின்ச் ரயில் மூலம் பழனி மலைக்கு வருகை தந்தார். பழனி திருக்கோயில் சார்பாக இணைஆணையர் செல்வராஜ் துணை ஆணையர் செந்தில்குமார் ஆகியோர் வரவேற்றனர். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் வினய்,மாவட்ட கண்காணிப்பாளர் சரவணக்குமார் ஆகியோர் உடன் வந்தனர்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இரவு 7.35 மணியளவில் முருகப் பெருமானை இராஜ அலங்காரத்தில் சிறப்பு தீபாராதனையுடன் தரிசித்தார். திருக்கோயில் சார்பாக அறநிலையத்துறை இணைஆணையர் செல்வராஜ் முன்னிலையில் பண்டிதர் செல்வம் குருக்கள் பிரசாதங்கள் வழங்கினார்கள். பின்பு இரவு 8.30 மணியளவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வின்ச் மூலம் இறங்கி திண்டுக்கல் புறப்பட்டுச் சென்றார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!