பேரறிவாளன் தாயார் – ஆளுநர் சந்திப்பு வீடியோ பேட்டி..

இன்று (24.9.18) ராஜ்பவனில், தமிழக ஆளுநரை, பேரறிவாளன் தாயார் திருமதி. அற்புதம், பேரரிவாளன் விடுதலை சம்மந்தமாக 11.15 மணி முதல் 11.35 மணி வரை ஆளுநரை சந்தித்து மனு அளித்து விட்டு பத்திரிக்கைக்கு பேட்டி அளித்தார்.

அப்பேட்டியில், எனது மனுவை ஆளுநர் முழவதுமாக படித்தார், மொழி பெயர்ப்பாளர் மூலம் உரையாடினேன், நீதியரசர் கிருஷ்ணய்யர், கே.டி.தாமஸ் உள்ளிட்டவர்கள் புத்தகங்கள் மற்றும் குறுந்தகடு உள்ளிட்ட வற்றை ஆளுநரிடம் அளித்தேன். ஆளுநர் பரிசீலிப்பதாக உறுதியளித்தார். எனக்கும் அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று ஆளுநர் விரைவில் நல்ல முடிவெடுப்பார் என்ற நம்பிக்கையுள்ளது, என்று பேட்டி அளித்தார்.

செய்தி: அ.சா.அலாவுதீன்.மூத்த நிருபர் ( பூதக்கண்ணாடி மாத இதழ்)- கீழை நியூஸ்  

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!