புதிய கழிப்பறைகள் கட்டி மாணவ மாணவிகளையே திறக்க வைத்து அசத்தல்… அதிகாரிகளின் அலட்சியத்தை முறியடித்து மாணவ மாணவிகளுக்கு சொந்த செலவில் கழிப்பறை கட்டிக் கொடுத்த தலைமை ஆசிரியர்..
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுமார் 60 மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த பள்ளியில் கழிப்பறைகள் சிதரமடைந்து மாணவ மாணவிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள் என தொடர்ந்து புகார் எழுந்து வந்தது.
அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் உடனே அப்பள்ளியின் கழிப்பறைகளை இடித்து தரைமட்டமாக்கியதுடன் அப்படியே விட்டு விட்டார்கள். தொடர்ந்து புதிய கழிப்பறை கட்ட கோரிக்கை வைத்து வந்தாலும் அது செவிடன் காதில் ஊதிய சங்காய் போனது.
*”இடித்து அகற்றிய அரசு அதிகாரிகள் – கட்டி முடித்த தலைமை ஆசிரியர்”*
ஆனால் இடித்த அதிகாரிகள் புதிதாக மாணவ மாணவிகளுக்கு கழிப்பறை கட்டிக் கொடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு இருந்து வந்தது. இதனால், பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் மெத்தன போக்கில் இருந்து வந்துள்ளனர். இதனைக் கண்ட பள்ளி தலைமையாசிரியர்
மாணவ மாணவிகள் ஆறு மாத காலமாக கழிப்பறைக்கு செல்வதற்கு மிகுந்த சிரமப்பட்டு வருவதை நேரில் கண்டு வேதனையடைந்த தலைமையாசிரியர், தன்னுடைய சொந்த செலவில் தற்காலிக கழிப்பறை கட்டி அதனை பள்ளி மாணவ மாணவிகளை அழைத்து வந்து அவர்களை வைத்து திறந்து வைத்தார்.
இதனால் பள்ளி மாணவ மாணவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிகழ்வுகளை கண்டு அப்பகுதி மக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
You must be logged in to post a comment.