ராமநாதபுரம் மாவட்டம் பாண்டியூர் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் மனைவி சாரதி இந்த தம்பதியருக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் மூன்றாவது பிரசவத்திற்காக கடந்த 30-ம் தேதி என்று ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுகப்பிரசவம் மூலம் ஆண் குழந்தை பிறந்த நிலையில் பிரசவத்திற்கு பின்னர் இயல்பாக சுருங்க வேண்டிய கர்ப்பப்பை சுருங்காததன் காரணமாக அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது இதன் காரணமாக உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த கர்ப்பிணி தாயை மருத்துவர் தினேஷ் முகில் மற்றும் நந்தினி மற்றும் செவிலியர்கள் கடும் போராட்டத்திற்கு பின்னர் தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர். மிகவும் ஆபத்தான நிலையில் போராடிய தாயும் சேயும் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய அரசு மருத்துவமனைகள் மற்றும் செவிலியர்களுக்கு அந்த பெண்ணின் உறவினர்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

You must be logged in to post a comment.