ராமநாதபுரம் அரசு மருத்துவமனை மருத்துவரின் சேவை ! பாராட்டிய பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் !!

 ராமேஸ்வரம் திருக்கோவிலில் வெளியில் யாசகம் ( பிச்சை )எடுத்துக் கொண்டிருந்த செல்லமுத்து வயது 63 என்பவருக்கு வயிற்று வலி ஏற்பட்டு சிறுநீர் வெளியே செல்லாமல் அவதிப்பட்டு இருந்த நிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனை செய்வதற்கு சென்றுள்ளார் . அவரை மருத்துவர் பரிசோதனை செய்த பொழுது உடலில் இருந்து நீர் செல்லும் பகுதியில் கற்கள் அடைப்பு இருப்பதை கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று அவரிடம் கூறியுள்ளனர்.  அவர் கூட யாரும் இல்லாத நிலையிலும் எந்த ஒரு மருத்துவ காப்பீடு திட்டம் இல்லாத நிலையிலும் இருப்பதை அறிந்த சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் அறிவழகன் மனிதாபிமானம் அடிப்படையில் தன்னுடைய சொந்த செலவில் உபகரணங்கள் வாங்கிக் கொண்டு அறுவை சிகிச்சை செய்து கற்களை வயிற்றிலிருந்து அப்புறப்ப டுத்தியுள்ளார். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு எந்த ஒரு உபகரணமும் இல்லாத நிலையிலும் சொந்த உபாகரனங்களை வைத்து சிறப்பாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் அறிவழகனுக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர். 

.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!