ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் ‘குப்பா வலசை’ கிராமத்தைச் சேர்ந்த நாகசாமி வயது 45.இவர் குடும்ப வறுமை காரணமாக, அரபு நாடான துபாய் நாட்டில் கூலித் தொழிலாளியாக பணி செய்து வந்தார். இந்த நிலையில் இவர் கடந்த 20.7.2024 அன்று துபாயில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு திடீரென இறந்து விட்டார். நாகசாமியின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு 28.7.2024. அன்று துபாயில் உடல் தகனம் செய்யப்பட்டது. இவருடைய மனைவி பூபதி 5 வயதில் ஒரு பெண் குழந்தை மூன்று வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. குடும்ப சூழ்நிலை காரணமாக இவரது உடலை தாயகத்திற்கு கொண்டுவர முடியவில்லை. ஆகவே தான் இவருடைய உடலை அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது. யாருடைய ஆதரவுமின்றி, மிகவும் வறுமையான சூழலில் வாழும் அவரது குழந்தைகளின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு அரசு இவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் கோரிக்கை வைக்கின்றனர். வாழ்வாதாரத்திற்காக குடும்ப வறுமை கருதி அரபு நாட்டிற்கு வேலைக்கு சென்ற இடத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டு அங்கு மரணம் அடைந்த அவரின் மனைவி, குழந்தைகள் அனாதையாக வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தாய் உள்ளம் கொண்டு இந்த அரசு அவர்களுக்கு நிவாரண உதவி வழங்கி உதவ வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

You must be logged in to post a comment.