ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் பேருந்து நிலையத்திற்கு கமுதி அருப்புக்கோட்டை பெருநாழி பசும்பொன் போன்ற ஊர்களுக்கு செல்லும் பிரதான அரசு பேருந்துகள் வந்து செல்கின்றது. அவ்வூர்களுக்கு செல்லக்கூடிய கிராம மக்கள் மற்ற மாவட்டங்களில் இருந்து மதுரை வழியாகவும் ராமநாதபுரம் வழியாகவும் பார்த்திபனூர் பேருந்து நிலையத்துக்கு அரசு பேருந்தில் பயணிக்கின்றனர்.
ஆனால் இரவு நேரங்களில் ராமநாதபுரத்தில் இருந்து மதுரைக்கு செல்லக்கூடிய அரசு பேருந்துகள் மற்றும் மதுரையில் இருந்து பரமக்குடி வழியாக ராமநாதபுரம் செல்லக்கூடிய அரசு பேருந்துகள் பார்த்திபனூர் பேருந்து நிலையத்திற்கு செல்லாமல் நெடுஞ்சாலையில் பயணிகளை இறக்கி விட்டு செல்கின்றனர் . இதனால் அரசு பேருந்தில் பயணிக்க கூடிய பெண்கள் குழந்தைகள் முதியோர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும் இரவு நேரங்களில் நெடுஞ்சாலை வழியாக செல்லக்கூடிய வாகனங்கள் வேகமாக செல்வதால் சாலையைக் கடப்பதற்கு மிகுந்த அச்சப்பட்டு வருவதாகவும் தொலைதூரத்துக்கு பார்த்திபனூர் பேருந்து நிலையத்துக்கு சென்று அங்கிருந்து தங்களுடைய ஊர்களுக்கு செல்வதற்கு பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர் இதனை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சித் தலைவர் கூடுதல் கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
You must be logged in to post a comment.