பட்டிவீரன்பட்டி அருகே அரசு பேருந்து டயர் பஞ்சர், மாற்று டயர் இல்லாமல் பொதுமக்கள் அவதி!
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் இருந்து செம்பட்டிக்கு அரசு பேருந்து 40 பயணிகளுடன்
பட்டிவீரன்பட்டி அருகில் சென்று கொண்டிருந்தபோது முன்பக்க டயர் பஞ்சர் ஆகி நடுரோட்டில் நின்றது. மாற்று டயர் இல்லாததால், பேருந்தில் இருந்த பயணிகள் அவ்வழியாக வந்த ஷேர் ஆட்டோ மற்றும் தனியார் பேருந்துகளில் ஏறி ஊர்களுக்கு சென்றனர்.
கிராமப்புறங்களுக்கு தரமான அரசு பேருந்துகளை வத்தலக்குண்டு பணிமனையில் இருந்து இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

