நீங்கள் நல்லவரா?? சான்றிதழ் பெற முடியுமா?? அப்படியென்றால் இனி அமீரகத்திற்கு வேலைக்கு செல்ல முடியும் ..

உலகிலேயே பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாக திகழ வேண்டும் என்ற குறிகோளாடு ஐக்கிய அரபு அமீரகம் அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

நேற்று (08-01-2018) இனி வேலைக்கான உரிமம்  பெற நன் மதிப்பு சான்றிதழ் அவசியம் சமர்பிக்க வேண்டும் என்று அமீரகத்தின் உயர் மட்ட குழு அறிவித்துள்ளது. இந்த புதிய நிபந்தனை எதிர் வரும் பிப்ரவரி 4 ஆம் தேதி 2018 முதல் அமலாக உள்ளது. நன் மதிப்பு சான்றிதழை சொந்த நாட்டில் அல்லது ஐந்து வருடங்களுக்கு மேலாக வசிக்கும் நாட்டிலிருந்து பெற்று இருக்க வேண்டும்.  நற்சான்றிதழின் உண்மைத் தன்மையை அறிந்த பின்னர் அமீரக வெளியுறவுத் துறையினால் பரிசீலனை செய்யப்படும் என்று உயர் மட்ட குழு அறிவித்துள்ளது.

இந்த நற்சான்றிதழ் வேலை விசாவில் வரும் ஊழியருக்கு மட்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  அதே சமயத்தில் தன்னை சார்ந்தவர்களுக்கோ (மனைவி மற்றும் குழந்தைகள்) அல்லது சுற்றுலா விசாவில் வருபவர்களுக்கோ கட்டாயம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!