மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளான பிப்., 24ல், இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்த 8 குழந்தைகளுக்கு தமிழக தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் எம். மணிகண்டன் தலா ஒரு பவுன் மோதிரம் அணிவித்தார். மேலும் குழந்தை உடை, குழந்தை படுக்கை, கை கழுவும் திரவம், சவுபாக்யா உள்ளிட்ட 16 பொருட்கள் அடங்கிய அம்மா குழந்தை நல பரிசு பெட்டகமும் வழங்கினார். மருத்துவனை உள், வெளிநோயாளிகளிடம் அமைச்சர் மணிகண்டன் குறை கேட்டார். அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜவகர்லால், மூத்த மருத்துவர் மலையரசு, மகப் பேறு டாக்டர் சிவானந்தவல்லி, மாவட்ட அதிமுக அவைத்தலைவர் செ. முருகேசன், ராமநாதபுரம் நகராட்சி முன்னாள் தலைவர் ராமமூர்த்தி, ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் ராஜேந்திரன், நகர் பொருளாளர் ஜெயக்குமார், துணை செயலர் ஆரிப் ராஜா உடனிருந்தனர்.
இதனை தொடர்ந்து 3, 5, 8, 9, 21, 23, 26, 27, 29 வார்டுகளில் தமிழக தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன் அதிமுக., கொடி ஏற்றி வைத்தார். ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி முன்னாள் இணை செயலாளர் தஞ்சி பி.சுரேஷ் , கடலாடி ஒன்றிய அதிமுக துணை செயலர் சண்முகபாண்டியன், முன்னாள் நகர் செயலாளர் கே.சி. வரதன், அண்ணா தொழிற்சங்க டாஸ்மாக் மாவட்ட செயலாளர் ராபர்ட், நகர் ஜெ., பேரவை செயலர் முத்து பாண்டி, முன்னாள் கவுன்சிலர்கள் வீரபாண்டியன், புவனேஸ்வரி, நாகஜோதி, வார்டு செயலர் ஆதில் அ அமீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.














You must be logged in to post a comment.