தாறுமாறாக உயரும் தங்கம் விலை; புதிய உச்சத்தில் வெள்ளி விலை..

புத்தாண்டு தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்து வரும் நிலையில், பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இன்று (ஜனவரி 13) தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

சென்னையில் கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை பெரும் ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு சவரன் தங்கம் ரூ.1,03,200-க்கு விற்பனையானது. ஆனால் நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,760 அதிரடியாக உயர்ந்தது. அந்த விலை உயர்வு இன்றும் தொடர்வதுதான் சாமானிய மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய நிலவரப்படி (ஜனவரி 13), சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,170-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் சவரனுக்கு ரூ.400 அதிகரித்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,05,360 என்ற புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்துள்ளது. அதேபோல், 18 காரட் தங்கத்தின் விலையும் கிராமுக்கு ரூ.35 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.10,980-க்கும், ஒரு சவரன் ரூ.87,840-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்து வருகிறது. இன்று ஒரே நாளில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்துள்ளது. இதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ.292-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 அதிகரித்து ரூ.2,92,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஜனவரி 3-ம் தேதி ஒரு கிலோ வெள்ளி ரூ.2,57,000-க்கு விற்கப்பட்ட நிலையில், கடந்த 11 நாட்களில் மட்டும் கிலோவுக்கு ரூ.35,000 வரை விலை அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை காலத் தேவைகள் காரணமாக இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது. 2025-ம் ஆண்டு முழுவதும் தங்கம் விலை அசாத்தியமான வேகத்தில் ஏறி வந்த நிலையில், 2026-ன் தொடக்கத்திலேயே இந்த விலை உயர்வு இல்லத்தரசிகள் மற்றும் முதலீட்டாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!