தர்மபுரியில் மர்மமான முறையில் ஆடுகள் சாவு…வீடியோ..

தர்மபுரி  மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த மஞ்சார அள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட செம்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி வயது52 மீன்பிடி தொழிலாளி இவருக்கு சிதம்பரம் என்கிற மனைவியும் ஒரு ஆண் இரண்டு பெண்கள் உள்ளனர்.

இந்நிலையில் மேட்டூர் ஆற்றின் எல்லைப்பகுதி செம்மேட்டில் வழக்கம்போல் மீன்பிடித்து விட்டு வீடு திரும்பினார். இவரது சொந்த நிலத்தில் 39 ஆடுகளை வைத்து வளர்த்து வந்தார். வழக்கம்போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு திறந்துவிட பார்க்கும்போது அதில் 16 ஆடுகள் மர்மமான முறையில் மூக்கு மற்றும் காதில் இரத்தம் வடிந்து இறந்து கிடந்தது தெரியவந்தது. மேலும் மீதமுள்ள 23 ஆடுகள் மயக்க நிலையில் இருந்ததால் அதிர்ச்சி அடைந்த பழனிசாமி பென்னாகரம் கால்நடை மருத்துவருக்கு தகவல் அளித்தார். விரைந்து வந்த கால்நடை மருத்துவ குழுவினர்கள் பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி கால்நடை தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை முடிந்த பிறகு தான் ஆடுகள் இறந்ததற்கு என்ன காரணம் என்று தெரியவரும் என மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து பென்னாகரம் தாசில்தார் பிரசன்ன மூர்த்தி, Ri பழனிவேல், விஏஒ.சாந்தப்பன், ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மர்மமான முறையில் ஆடுகள் இறந்தது குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தர்மபுரி செய்தியாளர் N.ஸ்ரீதரன்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!