சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு திருச்சி கீழரண் சாலை மாநகராட்சி அரசு மேனிலை பள்ளியில் சைல்டு லைன் நோடல் நிறுவனம் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிரான கூட்டமைப்பு இணைந்து பெண் குழந்தைகள் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பள்ளி தலைமையாசிரியர் இராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக குழந்தை நல குழு உறுப்பினர்கள் முனைவர் சங்கரி, வழக்கறிஞர் ராஜலட்சுமி ஆகியோர் பெண் குழந்தை உரிமை, பாதுகாப்பு குறித்து பேசினார்கள்.
நோடல் ஒருங்கிணைப்பாளர் தியகராஜன் VAC ஒருங்கிணைப்பாளர் பிரபு ஆகியோர் குழந்தை நலன் சார்ந்த சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார்கள். நிகழ்ச்சியில் 100க்கு மேற்பட்ட பெண் குழந்தைகள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.
தகவல்:- அபுபக்கர்சித்திக்
செய்தி:-அ.சா.அலாவுதீன்.மூத்த நிருபர் கீழை நியூஸ்( பூதக்கண்ணாடி மாத இதழ் )

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print












