இராமநாதபுரம் பள்ளியில் கல்வி சீர் வழங்கும் விழா..

இராமநாதபுரம் வள்ளல் பாரி நகராட்சிக்கு கல்வி சீர் வழங்கும் விழா, திறன் வகுப்பறை (ஸ்மார்ட் கிளாஸ்) திறப்பு விழா நடந்தது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் கல்வி சீர் வழங்கப்பட்டு வருகிறது.

இதன்படி இராமநாதபுரம் வள்ளல் பாரி நகராட்சி பள்ளியில் 1988 ஆம் ஆண்டு பயின்ற மாணவர்கள் சர்புதீன், நூருல் அமீன், செந்தில்குமார், முத்து முகமது, பசீர் அகமது, ரமேஷ் ஆகியோர் சார்பில் ரூ.1.75 லட்சம் மதிப்பில் திறன் வகுப்பறை, ரூ.1.25 லட்சம் மதிப்பில் கல் சீர் பொருட்கள் ராமநாதபுரம் கல்வி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பிரேமிடம் வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியர் எஸ்தர் வேணி, உதவி திட்ட அலுவலர் சுரேஷ்குமார், வட்டாரக் கல்வி மேற்பார்வையாளர் விமலா ரமணி, ஆசிரியர் பயிற்றுநர்கள் தேவி உலக ராஜ், சித்ரா தேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!